தர்மபுரி: மாணவர்களுக்கு ஒலிம்பியாட் விருது வழங்கிய ஆட்சியர்

0பார்த்தது
தர்மபுரி: மாணவர்களுக்கு ஒலிம்பியாட் விருது வழங்கிய ஆட்சியர்
தருமபுரி மாவட்டம், KPJ தங்கமணி திருமண மஹாலில் குட் வெல் அகாடெமி சார்பில் நடைபெற்ற அபாகஸ் ஒலிம்பியாட் விருது வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். சிறப்பாக கணித பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் கோப்பைகளையும் அவர் வழங்கினார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி கருவியையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி