விழுப்புரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் மற்றும் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ், தருமபுரி எம்பி மணி முன்னிலையில் புதன்கிழமை பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தருமபுரி எம்எல்ஏ எஸ். பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.