தர்மபுரி: பாலில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

794பார்த்தது
தர்மபுரி: பாலில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
செட்டிக்கரை கான் காலனி பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தர்ஷினிதேவி, வீட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதாக தாயார் கண்டித்ததால், பாலில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தர்மபுரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி