தர்மபுரி: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

0பார்த்தது
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நார்த்தம்பட்டி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமையில் நடந்த இதில் மாநில தலைவர் பட்டாபிராமன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். நார்த்தம்பட்டியில் 48 குடும்பங்களுக்கு இலவச வீடு வழங்க ஆதிதிராவிடர் நலத்துறையால் 1977ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. எனவே உடனடியாக 48 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தமிழக அரசை கண்டித்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி