தருமபுரி மாவட்டம் கடத்தூரில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தமிழக அரசின் சமுதாய வளைகாப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன் கலந்துகொண்டு தாய்மார்களை வாழ்த்தி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கடத்தூர் பேரூராட்சி செயலாளர் கே.டி. மோகன், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.