தர்மபுரி: முன்னாள் அமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா

0பார்த்தது
பாலக்கோடு அருகே கரகதஅள்ளி சமுதாய கூடத்தில், ஒன்றியத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்ரீ சுகந்திரியா முன்னிலையில் வெள்ளிக்கிழமை அன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், புடவை மற்றும் ஏழு வகையான உணவுகளை சீர்வரிசையாக வழங்கி ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.