தர்மபுரி: ஆதவ் அர்ஜுனாவை கைது செய்யுமாறு புகார் மனு

705பார்த்தது
த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை கைது செய்யக்கோரி மாணவர் அமைப்பினர் பொம்மிடி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையங்களில் இன்று (நவ. 09) ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தனர். கல்லூரி மாணவர்களை ரவுடிகள் மற்றும் கூலிப்படைகள் போல சித்தரித்து பேசியதை கண்டித்து மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழ் மாணவர் மன்ற தலைவர் சத்யா மற்றும் கிரிவளவன் தலைமையில் மாணவர்கள் பங்கேற்று புகார் மனு வழங்கினர்.

தொடர்புடைய செய்தி