தர்மபுரி: கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட மாடுகள் பறிமுதல்

1பார்த்தது
ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் அனுமதியின்றி 27 மாடுகளை ஏற்றி வந்த லாரியை நல்லம்பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை மாலை இந்திய விலங்குகள் நல வாரியத்தின் புளு கிராஸ் அமைப்பு உறுப்பினர் செந்தில் தடுத்து நிறுத்தினார். லாரியில் மாடுகள் சிறு இடைவெளி இன்றி அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. செந்தில் அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் 27 மாடுகளை மீட்டனர். உரிமையாளர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி