தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோளையனூர் பகுதியில் நேற்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் தற்போது திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கிய ஆலோசனைகள் குறித்தும், அளவிலான தேர்தல் பணி குழு அமைத்தல் தொடர்பாகவும், பூத் அளவிலான இளைஞரணி நியமித்தல் குறித்தும் மற்றும் பல்வேறு கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நிர்வாகிகளிடம் ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட, ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் என ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்