தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி விழுதிப்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன், தனது விவசாய நிலத்தில் மின்சார மோட்டார் பழுதானதைக் காணச் சென்றபோது மின்சாரம் தாக்கி புதன்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரைத் தேடிச் சென்றபோது, மோட்டார் அறை அருகே அவர் சடலமாகக் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.