தாளநத்தம் கிராமத்துக்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, தனது 2 ஏக்கர் விவசாய நிலத்திற்கு முறையான வழிப்பாதை இல்லாததால் ஓடை புறம்போக்கு நிலம் வழியாக சென்று வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அந்த நிலத்தை ஆக்கிரமித்து வழியை அடைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வியாழக்கிழமை கிராம நிர்வாக அலுவலகத்தில் குடும்பத்துடன் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு
போராட்டம் கைவிடப்பட்டது.