தர்மபுரி: அரசு பள்ளியில் தீயணைப்புத் துறையினர் ஒத்திகை

1பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை மற்றும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாப்பிரெட்டிபட்டி அருகே வெங்கடசமுத்திரம் அரசுப் பள்ளியில், நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மழைக்கால மற்றும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், இருபால் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி