தர்மபுரி: மாணவர்களுடன் முன்னாள் அமைச்சர் கலந்துரையாடல்

3பார்த்தது
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மோளையானூரில் முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் தலைமையில் 'காபி வித் பிபி' என்ற நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்னாள் அமைச்சர் பழனியப்பனுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வு சிறப்பாக அரங்கேறியதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி