தர்மபுரி: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர்

0பார்த்தது
தர்மபுரி: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனியப்பன், தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இரவு பகலாக உழைத்த மாவட்டம், ஒன்றியம், பேரூர், கிளை செயலாளர்கள், பாக முகவர்கள், டிஜிட்டல் பூத் ஏஜென்ட்கள், நகர, வார்டு நிர்வாகிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.