தர்மபுரி: ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம்

0பார்த்தது
தர்மபுரி நகர அரிமா சங்கம், தர்மபுரி ரோட்டரி சங்கம் மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இன்று சனிக்கிழமை தருமபுரியில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்தியது. இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டன. ரோட்டரி சங்க அறக்கட்டளை தலைவர் டிஎன்சி மணிவண்ணன், விவேகானந்தன், குணசீலன், கிருஷ்ணன் மற்றும் தர்மபுரி நகர அரிமா சங்க தலைவர் அல்லி முத்து ஆகியோர் கலந்துகொண்டனர். மொத்தம் 400 பேர் இந்த முகாமில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி