தர்மபுரி: வடசந்தையூரில் 30 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி வடசந்தையூரில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட அளவிலான ஆடுகள் விற்பனை சந்தையில், நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ. 10,000 வரையிலும், ஆட்டுக்கிடாக்கள் ரூ. 8500 முதல் ரூ. 20,000 வரையிலும் விற்பனையானது. வியாபாரிகளின் தகவலின்படி, நேற்று ஒரே நாளில் சுமார் 30 லட்ச ரூபாய்க்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி