பாலக்கோடு அரசு பணிமனையில் 19 ஆண்டுகளாக நடத்துனராகப் பணியாற்றி வரும் பொன்முடி, சமீபத்திய தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
போக்குவரத்து பணிமனைகள்
திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இருப்பதால், சூழ்ச்சி செய்து சேலம் மண்டலம் அஸ்தம்பட்டிக்கு அவர் பணி மாறுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொன்முடி, தனது குடும்பத்துடன் இன்று சனிக்கிழமை, பாரதிபுரம் அரசு
போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு பணி மாறுதலை ரத்து செய்யக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.