தர்மபுரி: மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

1பார்த்தது
அரூர் பூந்தி மஹால் தெருவில் வசிக்கும் வெங்கடேஷ்-பூங்கொடி தம்பதியினருக்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இன்று திங்கட்கிழமை காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த கணவன் வெங்கடேஷ், மனைவி மகாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி