தர்மபுரி: பழைய பேருந்து நிலைய விவகாரம் எம்எல்ஏ சௌமியா பேட்டி

0பார்த்தது
தர்மபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி, தர்மபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு இரவில் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றும் அதிகாரம் இருக்கும்போது, மறு இரவில் மீண்டும் பேருந்துகள் வந்து செல்ல அறிவிப்பு வெளியிட அதிகாரம் இல்லையா என கேள்வி எழுப்பினார். கடந்த நான்கு மாதங்களாக பாமக இது குறித்து போராடி வருவதாகவும் தெரிவித்தார். மாவட்டத்தில் ஏற்கனவே ரயில் போக்குவரத்து வசதி இல்லை, தலைநகரில் மேம்பால வசதி இல்லை, தற்போது பேருந்து வசதியும் இல்லையெனில் என்ன ஆவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி