தர்மபுரியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு குழந்தை முதல் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள், விவசாயிகள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளது. இருப்பினும், திமுக அரசைத் தீய சக்தி என்றும், மக்களை மது, சிகரெட், போதை, வன்முறை போன்ற தவறான பாதையில் வழிநடத்தும் இவர்கள், தங்களை நல்ல சக்தியாகக் காட்டிக்கொண்டு மக்களைத் திசை திருப்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.