பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் வெற்றிவேல் 1,02,928 வாக்குகள் பெற்று,
திமுக வேட்பாளர் பழனியப்பனை 33,037 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முதல் சுற்று முதல் தொடர்ந்து 25 சுற்றுகளிலும் முன்னிலை பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் அம்மா பேரவை செயலாளர் எஸ்ஆர். வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.