தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கூட்டம்

325பார்த்தது
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் 120 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சதீஸிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சரவணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி