தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை கோவில் பகுதியில் பழுதடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டது. இது குறித்து இன்று புதன்கிழமை அப்பகுதி மக்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரனிடம் புகார் அளித்தனர். உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ., புதிய மின்கம்பம் அமைக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.