தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மஞ்சவாடி கணவாயில் இன்று நவ. 21 வெள்ளிக்கிழமை விடியற்காலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து தடைபட்டது.