தர்மபுரி: மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது

பாலக்கோடு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த செந்தில், அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து சுமார் 7 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை முதலீடாகப் பெற்று மோசடி செய்துள்ளார். முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் 2025 ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து செந்திலைத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த செந்திலை நேற்று சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையிலான காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.