தர்மபுரி: மக்கள் தேசம் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

1பார்த்தது
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் தேசம் கட்சி மற்றும் அகில இந்திய ஆதிதிராவிட பறையர் பேரவை சார்பில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மக்கள் தேசக்கட்சி தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு வள்ளல் அதியமான் அவ்வையார் பெயரை சூட்ட வேண்டும் என்றும், மத்திய அரசால் வழங்கப்பட்ட 17 ஆயிரம் கோடி பட்டியல் இன மக்களுக்கான நிதியில், திமுக அரசு மகளிர் உரிமைக்காக கள்ளத்தனமாக 5 ஆயிரம் கோடி பெற்றுக்கொண்டு மீதம் உள்ள 12 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி