பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகரில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகளுக்கு வெடி வைப்பதால், சுற்றியுள்ள ராஜூவ்காந்தி நகர், கோம்பை, காளிகொட்டாய் கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயம் பாதிப்பதாகவும், அரசு உரிய கவனம் செலுத்தி கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.