பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகளுக்கு வெடி வைப்பதால், சுற்றியுள்ள 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாய நிலங்களில் தூசி மாசு ஏற்படுவதாகவும், விவசாய தொழிலை நம்பி வாழும் மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு உரிய கவனம் செலுத்தி கல்குவாரியை சீல் வைத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.