தர்மபுரி: எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

243பார்த்தது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று புதன்கிழமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். இந்த முகாமில் பெறப்பட்ட 79 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், புதிதாக பெறப்பட்ட 30 மனுக்கள் மேல் விசாரணைக்காக அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி