தர்மபுரி: எம்எல்ஏ உடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம்

64பார்த்தது
தமிழகத்தில் புதிய பேரூராட்சிகளை உருவாக்கியும் நகராட்சிகளில் ஊராட்சிகளை இணைத்தும் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஆணையை வெளியிட்டது. இதனை அடுத்து, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் வெங்கடசமுத்திரம் ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியோடு இணைக்கும் திமுக அரசை கண்டித்து பொதுமக்கள் கவனஈர்ப்பு பேரணியை இன்று (ஜனவரி 03) நடத்தினர். இந்த கவன ஈர்ப்பு பேரணியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கினார். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி