தர்மபுரி: தொழிலாளி தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்

0பார்த்தது
தர்மபுரி நத்தஅள்ளியில் ரத்தினவேல் நடத்தி வரும் கல்குவாரியில் வெடிகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிப்பதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், அனுமந்தன் என்பவர் இது குறித்து ரத்தினவேலிடம் முறையிட்டபோது, ஆத்திரமடைந்த ரத்தினவேல் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த அனுமந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, உரிய விசாரணை கோரி அனுமந்தன் உறவினர்கள் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து காவலர்கள் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி