பாப்பிரெட்டிப்பட்டி சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட 11 மலைக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. இதனால் நளுக்கம்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, பெரிய பாறைகளும் மரங்களும் சாலையில் விழுந்தன. பால் கொள்முதல் நிலையத்திற்குச் செல்லும் வாகனம் சிக்கிக்கொண்டது. அங்கிருந்த பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பாறைகளையும் மரங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.