தர்மபுரி: காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் கருத்தரங்கு

0பார்த்தது
தருமபுரி இலக்கியம்பட்டி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில், 'காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கருத்தரங்கு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் மருத்துவர் எம். பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு, காசநோய் கண்டுபிடிப்பு திட்டத்தில் வீடு வீடாக சென்று சிறப்பாக பணியாற்றிய கல்லூரி மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார். கல்லூரி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி