தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள அரசு பட்டுக் கூடு அங்காடியில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற பட்டுக்கூடு ஏலத்தில், தர்மபுரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த 2,061 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 895, சராசரியாக ரூ. 812 மற்றும் குறைந்தபட்சமாக ரூ. 620 என மொத்தம் 21,22,311 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.