தர்மபுரி மொடக்கேரி பகுதியில் உள்ள 16 அடி உயர மகாகாளி வராகி அம்மன் கோவிலில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று (நவம்பர் 9) சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.