தர்மபுரி: தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை

531பார்த்தது
தர்மபுரி: தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே குமரிமடுவைச் சேர்ந்த +1 மாணவி பவநிஷா, கடந்த 9-ந் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் வாந்தி எடுத்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். வீட்டில் வேலை செய்யாததால் தாய் கண்டித்ததால் விஷம் குடித்ததாக மாணவி தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொம்மிடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி