தர்மபுரி: யோகாசனத்தில் உலக சாதனை படைத்த மாணவர்கள்

0பார்த்தது
கடத்தூரில் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் யோகாவில் குப்த பத்மாசனம் நிலையில் 40 நிமிடங்கள் 26 வினாடிகள் உடலை சமநிலையில் நிறுத்தி உலக சாதனை படைத்தனர். இது 30 நிமிட சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. குப்த பத்மாசனத்தின் பலன்களையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி