தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள 65.27 அடி கொள்ளளவு கொண்ட வாணி ஆறு அணை நிரம்பியதால், செவ்வாய்க்கிழமை உபரிநீர் திறக்கப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்றனர். இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். வாணி ஆறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.