தர்மபுரி: ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைய உள்ள இடம் ஆய்வு

64பார்த்தது
தர்மபுரி: ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைய உள்ள இடம் ஆய்வு
தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்களையும் - வேளாண்மையும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் வேளாண் நிதி நிலை அறிக்கை 2025-2026 சட்டப்பேரவையில் நேற்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதைத்தொடர்ந்து இன்று வேளாண்மை விற்பனைக் கூடம் அமைய உள்ள மோளையானூரில் இன்று திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் வேளாண்மை துறை அலுவலர்கள், திமுக முன்னோடிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி