தர்மபுரி: திமுக அரசால் கடனில் தமிழகம் - அன்புமணி பேட்டி

1பார்த்தது
தர்மபுரி ஒன்றியம் வெள்ளாளப்பட்டி பி கொல்லப்பட்டி பிரிவு சாலையில் ரூ. 1.14.50.000 மதிப்பிலான திருமண மண்டபம் மற்றும் உணவு அருந்தும் கூடத்தை அன்புமணி ராமதாஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "ஐந்தாண்டு திமுக ஆட்சியில் மக்களுக்கு பயன்படும் எந்த திட்டமும் செயல் படுத்தவில்லை. கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் 20,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப பட்டுள்ளன. கடன் வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் அவலம் இந்தியாவிலேயே எங்கும் கிடையாது, தமிழகத்தில் மட்டுமே நடந்துள்ளது" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி