தர்மபுரி: தலைமை ஆசிரியர் அறைக்கதவை உடைத்து திருட்டு

523பார்த்தது
தர்மபுரி: தலைமை ஆசிரியர் அறைக்கதவை உடைத்து திருட்டு
தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தலைமை ஆசிரியரின் அறை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த மடிக்கணினிகள், மோடம், 5 செல்போன்கள் திருடப்பட்டன. நேற்று காலை பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்கள் கைரேகை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி