தர்மபுரி: சீங்காடு கிராமத்தில் தீமிதி திருவிழா

0பார்த்தது
தர்மபுரி சீங்காடு மலை மேல் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு அம்சமான தீமிதி விழா நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு தீமிதி நிகழ்வு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி