தர்மபுரி: பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

480பார்த்தது
தர்மபுரி: பணம் வைத்து சூதாடிய இருவர் கைது
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாணிக்கவாசகம் மற்றும் காவலர்கள் இன்று திங்கட்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓடசல்பட்டி ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவலர்கள், அதே பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 39), வனேசு (வயது 32) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 3 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி