தர்மபுரி: கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்கள் கைது

692பார்த்தது
தர்மபுரி: கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்கள் கைது
முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சரவணன் என்பவர் சுமார் 50 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், முத்துகவுண்டன்கொட்டாய் சுடுகாடு பகுதியில் வெற்றிவேல் என்பவரும் 50 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி