கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் தாஸ்நகர் கிராம மக்கள், அரூர் - கடத்தூர் சாலையில் அடிப்படை வசதிகள் கோரி வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். 144 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் பாதையை விரிவுபடுத்தவும், சாக்கடை கால்வாய் அமைக்கவும் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் 20-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த மறியல் நடைபெற்றது. விசிக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி செயலாளர் சென்னகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் பலர் பங்கேற்றதால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.