தர்மபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதியில் 32 & 33 வார்டுகளுக்கு உட்பட்ட அன்னசாகரம் - பாரதிபுரம் இணைக்கும் சாலை, 10 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக நோண்டப்பட்டு இதுவரை சரி செய்யப்படவில்லை. இந்த சாலை வழியாக 40 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து சாலையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நேற்று வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.