பாப்பிரெட்டிபட்டி அடுத்த துறிஞ்சிப்பட்டி வட சந்தையூரைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி திங்கட்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர். பிரதான சாலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கடையால், மது அருந்தியவர்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கடையை மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.