தர்மபுரி: விளையாட்டரங்கத்தில் கைப்பந்து பயிற்சி நிறைவு விழா

206பார்த்தது
தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான இலவச கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 4ம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கி இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மாவட்ட செயலாளர் தங்கராஜ் பயிற்சி குறித்து பேசினார். இணை செயலாளர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் சேகர், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், கைப்பந்து கழக தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். பொருளாளர் ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி