தர்மபுரி: பாசனத்திற்காக வாணியாறு அணையில் இருந்து நீர் திறப்பு

3பார்த்தது
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நீர்வளத்துறையின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதி விவசாய நிலங்களின் பாசனத்திற்காக 55 நாட்களுக்கு தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சரவணன், உதவி செயற்பொறியாளர் மோகனப்பிரியா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.