தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தாசிரஅள்ளியில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவம் தொடர்கிறது. நேற்று நள்ளிரவு ராமச்சந்திரன் என்பவரின் நிலத்தில் மக்காச்சோளப் பயிர்களை கூட்டம் கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகள் நாசம் செய்துள்ளன. இன்று காலை சென்று பார்த்தபோது பயிர்கள் முழுவதும் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. இப்பகுதியில் பல விவசாய நிலங்கள் காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்படுவதால், சோலார் மின்வேலி அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.